ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 25ஆம் மாத அமாவாசை அன்னதான விழா
![]()
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 25ஆம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலவை கமலக்கண்ணி திருக்கோயில் தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள், தொழிலதிபரும் மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல தலைவருமான ஜெ. லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இதில் முதல் நிகழ்வாக காலை சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மகளிர் அணி தலைவி கீதா சுந்தர், பைனான்சியர் தனஞ்ஜெயராஜ், நகரமன்ற உறுப்பினர் லோகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிற்றுண்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர். இரண்டாம் நிகழ்வாக மோர் வழங்கப்பட்டது. மூன்றாம் நிகழ்வாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெய் மாருதி சரவணன், மதன்குமார் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

