7300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. இருவர் கைது குமரி மாவட்ட போலீசார் அதிரடி

Loading

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு டெம்போ மூலம் அரிசி கடத்தப்படுவதாக  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது  நாகர்கோவிலில்  அமைந்துள்ள  தனியார் மருத்துவமனையின்  பின்புறத்தில் வைத்து வெற்றி விநாயகர் டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீசில்  மினி டெம்போ வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 146 ரேஷன் அரிசி மூட்டைகளை ( 7300kg) சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக கொண்டு செல்ல தயாராக நிற்பது கண்டறியப்பட்டது.  வடசேரி காவல்நிலைய போலீசார் மற்றும் தனிபிரிவு போலீசார்  லாரியையும், மூட்டைகளையும் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்தை இயக்கிய டிரைவர் மற்றும் அதன் உரிமையாளர் மற்றும் பார்சல் சர்வீஸ் உரிமையாளர்  இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
0Shares

Leave a Reply