தற்கொலைக்கு துாண்டும் எலிக்கொல்லி பசைக்கு தமிழக அரசு திடீர் தடை
சென்னை, ஏப்- 30
தற்கொலைக்கு தூண்டும் எலிக்கொல்லி பசைக்கு தடை விதித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கைவிவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் 136 அறிவிப்புகளை வெளிட்டார் முன்னதாக அவர் தனது பதிலுரையின் போது, தமிழகத்தில் 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 1450 மாணவர் சேர்க்கையிடங்கள் கிடைத்திருக்கிறது, இதன் மூலம் ஏற்கனவே உள்ள 6025 மாணவர் சேர்க்கை இடங்களோடு சேர்த்து மொத்தமாக 8025 இடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொலை மருத்துவ சேவை தொடங்கப்படும்அதிகரித்துவரும் தற்கொலை மரணங்கள் குறைக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உயிர் கொல்லியான எலிக்கொல்லி பசை விற்பனை தடை செய்ய சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்
சென்னை பெரியார் நகர், நாமக்கல் மாவட்டம் – கொல்லிமலை,நீலகிரி மாவட்டம் – கோத்தகிரி,அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 ரத்த வங்கிகள் அமைக்கப்படும். என்றும் . சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை,விபத்து காய சிகிச்சை பிரிவு தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ்,ரத்த வங்கி போன்ற சேவைகளை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 71.81 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக நவீன உபகரணங்களுடன் கூடிய நரம்பியல் பிரிவு கட்டணம் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த கேத்லேப் ( cathlab ) கருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 4 கோடி செலவில் பசுமையான இயற்கை சுற்றுச் சூழல் நிறைந்த ஒளிர்மிகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழகுபடுத்தப்படும்
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் மேற்கொள்ளப்படும் .பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பன்னாட்டு பொது சுகாதார மாநாடு நடத்தப்படும். நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 30 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் அனைவருக்கும் நல வாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.
.தாய் சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆர்எஸ் ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் தாய் சேய் நல ஒப்புயர்வு மையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் என்று 84.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை தண்டையார்பேட்டை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூபாய் 24 கோடி செலவில் தேசிய நல்வாழ்வு குழுவில் கட்டப்படும்.இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்,