வேலூரில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம்.
வேலூர் ஏப்ரல் 28
வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் துளசிங்கம், தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், வரவேற்றார்.மத்திய சரக்கு மற்றும் சேவை வரிஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அரிசி ஆலைகளுக்கு மின்இணைப்பு 112 கிலோ வோல்டிலிருந்து 150 ஆக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில செயலாளர் மோகன், வேலூர் அரிசி மண்டி வியபாரி சங்க தலைவர் கணேச அருணகிரி, துணை செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமச்சந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட துணை பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.