மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 21.03.2022-ம் தேதி கப்பலூரில் உள்ள தியாகராஜர் மில்ஸ் பெயரிலும், கம்பெனி வாடிக்கையாளர் பெயரிலும் போலியான E-mail ID களை உருவாக்கி அதன் மூலம் கம்பெனியின் பணத்தை கையாடல் செய்யும் நோக்கத்தில் மின்னஞ்சல் அனுப்பிய நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.
மேற்படி புகார் மீது புலன் விசாரணை செய்ததில் தியாகராஜர் மில்ஸின் முன்னாள் ஊழியர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சார்மிங், S. ஓய்ஸ்லின் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு தியாகராஜர் மில்ஸ் பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய மதுரை திருநகர் பாலாஜி தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் பாலாஜி என்பவரை கைது செய்து மதுரை மத்திய நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
பொது மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழப்புணர்வோடு இருக்கவும், சைபர் குற்றங்களால் பொது மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால், அது குறித்து அச்சமின்றியும், தயக்கமின்றியும் காவல் துறையினரை அணுகி புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்,