தமிழக அரசின் உத்தரவை மீறி பனைமரத்தை JCB இயந்திரம் உதவியுடன் மூட்டோடு வெட்டி சாய்த்த காவலர் …. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்  தாழாக்குடி அருகே ஆதிதிராவிடர் காலனி மக்கள் வசித்து வரும் பிளாங்காட்டு பகுதியில்  புறம்போக்கில் சுமார் அறுபது வருஷத்துக்கு மேலாக வளர்ந்து நிற்கும் பனைமரத்தை எஸ்.பி அலுவலகத்தில் வேலை பார்க்கும் போலீஸ் ஒருவர்  புறம்போக்கில் நின்ற  பனைமரத்தை JCB இயந்திரம் உதவியுடன் மூட்டோடு வெட்டி சாய்த்தது   அப்பகுதி ஆதிதிராவிடர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு பனை மரங்களை நட வேண்டும் யாரும் வெட்டக்கூடாது என ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் ஆணையை மீறி போலீசார் வளர்ந்து நின்ற பனை  மரத்தை வெட்டி சாய்த்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் . உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பொது மக்கள் மனு அளித்தனர். ஏற்கனவே பத்து நாள் முன்னதாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் மண்ணுள்ளி பாம்பு விற்க முயன்றதாக  வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *