ஆத்தூரில் உலக பூமி தினத்தையொட்டி; மண் காப்போம் விழிப்புணர்வு
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதிய பேருந்து நிலையம் எதிரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும் மண் வளம் காப்போம் என்ற நோக்கத்துடன் ஈசா யோகா சத்குரு அவர்கள் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான (ஏப்ரல் 22) நேற்று நடைபெற்றது. ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள் – Connect With Soil’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் காலை 8 மணிக்கு துவங்கி ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் பாரதியார் கல்வி நிறுவனங்களின் வெற்றிவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.