இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
பெண்கள் தைரியமாக காரியம் ஆற்றுவார்கள்.பிள்ளைகளுக்கான கல்வி செலவு அதிகரிக்கும்.தொழிலுக்கு தேவையான உதவிகள் தேடி வரும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகளை புகுத்துவீர்கள். அரசுத்துறையில் திட்டமிட்டு வேலை செய்வீர்கள். அலுவலகப் பணிகள் டென்ஷனை ஏற்படுத்தும்.
ரிஷபம்
கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரம் சமநிலையில் நடக்கும். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும்.
மிதுனம்
அவமானங்களை கூட வெகு மானங்களாக மாற்றிக் கொள்வீர்கள். தொழில்துறைகள் சூடுபிடித்து லாபத்தை அதிகரிக்கும். வியாபார சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். தனியார் துறை பணியாளர்கள் சிரத்தையுடன் வேலை செய்ய வேண்டும். என்ன செய்தாலும் கணவன்மார்கள் குறை சொல்வார்கள். மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும்.
கடகம்
குடும்பத் தேவைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளுவால் உடல் சோர்வடையும். கலைத்துறையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது வெற்றிக்கு வழிவகுக்கும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை நிலவும். தொழில் துறையில் போட்டிகள் தலைதூக்கும்.
சிம்மம்
எந்த வேலையை முதலில் பார்ப்பது என்று குழம்புவீர்கள். ஊழியர்கள் ஒத்துழைப்பால் பணி சிறப்பாக நடக்கும். சகோதர உறவுகளால் செலவு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். பணத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். நோய் அகன்று உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். புதிய வியாபாரங்களில் தடம் பதிப்பீர்கள்.அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். போக்குவரத்திற்காக வாகனங்கள் வாங்குவீர்கள். இதமான சூழ்நிலை நிலவினாலும் குடும்பத்தில் இறுக்கம் அதிகமாகும்.
துலாம்
உறவினர்களின் ஒத்துழைப்பு அறவே இருக்காது. விளையாட்டு கூட வினையாக மாறும்.வெளியூர் பயணங்கள் வீண் அலைச்சலை மட்டுமே கொடுக்கும். பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையை கிளப்புவார்கள். தொழில் துறைகள் சுமாராக நடக்கும். போட்டி பந்தயங்கள் கூடவே கூடாது. கொடுக்கல் வாங்கல் எழுத்து மூலமாக நடக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வீண் உறுதிமொழிகள் வில்லங்கத்தை தரும். எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கல் இடைஞ்சலாக இருக்கும். தொழில் துறைகளில் புதிய முயற்சிகள் வேண்டாம். வியாபாரிகள் சுமாரான லாபத்தை பெறுவார்கள். வெளி வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நண்பர்களின் உதவியை எதிர்பார்க்க இயலாது.
தனுசு
வெற்றிமேல் வெற்றியை குவிக்கப் போகிறீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். திருமண காரியங்கள் தடையின்றி நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். கல்வித் திறனால் பிள்ளைகள் பெருமைப்பட வைப்பார்கள்.வாழ்க்கை துணை உங்கள் முயற்சிகளுக்கு துணையாக இருப்பார்.வியாபாரிகள் அனுகூலமான பலன்கள் பெறுவீர்கள்.
மகரம்
அரசு வேலைகள் தடையின்றி நடக்கும்.கிளைத் தொழில்களுக்கு அடி போடுவீர்கள்.நண்பர்கள் தக்க நேரத்தில் கை கொடுப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பகை நீங்கி உறவுகள் பலப்படும்.வியாபாரம் விரிவடையும்.வேலைப் பளு குறையும்.நல்ல மரியாதை கிடைக்கும்.பணம் தாராளமாக புழங்கும்.
கும்பம்
செல்லுமிடமெல்லாம் சிறப்பு பெறுவீர்கள். தேடி வந்து உதவி செய்வார்கள்.குடும்பத்திற்காக கார் வாங்குவீர்கள்.பயணங்கள் மூலம் பணம் திரட்டுவீர்கள்.உறவினர்கள் உதவி கண்டிப்பாக உண்டு.வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.பிள்ளகள் அக்கறையுடன் படிப்பார்கள்.வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் களை கட்டும்.மழலைச் செல்வம் தவழும்.
மீனம்
இனம் தெரியாத கவலை மனதை அழுத்தும்.ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கும். கையில் காசு தங்குவது கடினம். கேட்ட இடத்தில் பணம் புரட்ட முடியாது. வழக்குகளில் சாதகமான நிலை இல்லை. வேலை பார்க்கும் இடங்களில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும். அறிவுத் திறமையால் அனைத்தையும் கடந்து வருவீர்கள். மனைவி மக்கள் ஆறுதலாக இருப்பார்கள்.
Read more at: https://tamil.oneindia.com/astrology/rasi-palan-today/articlecontent-pf340782-335826.html