நெல்லை நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

Loading

நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகேஉள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜேசுராஜ்(வயது73). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி மரியராஜ்(56). கிறிஸ்தவ பாஸ்டராக இருந்து வந்தார். இவர்களுடைய சகோதரி வசந்தா(40). இவர் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவர்களுடைய சித்தப்பா மகனான அழகர்சாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் நடத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில் ஜேசுராஜ் ஒரு நிலத்தில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க போர் போட்டு இருந்தார். அப்போது ஜேசுராஜ் உடன் அவரது தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா, வசந்தாவின் கணவர் மற்றொரு ஜேசுராஜ்(43), மரியராஜன் மகன் அமோஸ்(23). உள்ளிட்டோர் அந்த இடத்தில் இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த அழகர்சாமி, அவரது மனைவி பேச்சியம்மாள், மருமகன் செந்தூகுமார் (25), மகன்கள் ராஜ மணிகண்டன், சுந்தரபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து இவர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே இவர்கள் ஜேசுராஜ், மரியராஜ் உள்ளிட்டோரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அழகர்சாமி அவருடைய மனைவி பேச்சியம்மாள், செந்தில்குமார்,ராஜலட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சுந்தர பாண்டியன், ராஜ மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *