சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் வார்டு49ல் மக்களைத் தேடி மருத்துவம் சேவை
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் வார்டு49ல் மக்களைத் தேடி மருத்துவம் சேவையை சஞ்சீவிராயன் பேட்டை ஆரம்ப சுகாதாரமையத்தில் இருந்து பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடை நிலை சுகாதார சேவையாளர்கள் வீடு வீடாக பொதுமக்களை தேடி சென்று இலவசமாக சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கண்டரிந்து சேவைகளை வழங்கினர்.
தமிழக முதல்வர் அறிவித்த மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல்,நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள்,சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடை நிலை சுகாதார சேவையாளர்கள்,இயன்முறை மருத்துவர்கள்,நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.