உலகளவில் சிறந்து விளங்குவதற்கு இந்தியர்களின் கல்வித்திறனே காரணம், ஆஸ்திரேலியா குழுவினர் பெருமிதம்
மதுரைக்கு ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் இருந்து வருகை தந்த கல்வி குழுவினர், வீரபாஞ்சான் மகாத்மா குளோபல் பள்ளியில் ஆய்வு செய்து தெரிவித்ததாவது, முதன்மை மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குளோபல் எஜுகேஷன் சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து ஆன்லைன் திட்டங்களை வழங்குவதன் மூலம் மதுரையில் உள்ள பல உயர்நிலைப் பள்ளிகளுடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேலும் உலகளவில் இந்தியர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்களின் கல்வியின் தரமே காரணம் என பெருமிதம் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஆஸ்திரேலிய கல்வி குழு நிபுணர்கள் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வின் போது சர்வதேச துணைவேந்தர் மைக்கேல் வெஸ்லி, துணைவேந்தர் முத்துப்பாண்டியன், அசோக்குமார், மொய்ரா ஓ பிரையன், அலெக்ஸ் ஜான்சன், டேவிட் இஸ்ரவேல், ஆன்ட்ரு டிரினன், ஜேம்ஸ் மேஜ்மிக், மாதவா ராவ், ரக்யூல் ஷ்யாம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.