முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் செலுத்தி 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Loading

தூத்துக்குடி ஏப்:09
தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மேயர், துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் பல்வேறு பணிக்குழு தலைவர்கள் பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சியின் முதல் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலோடு இந்த முதல் கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் றுப்பேற்ற ஸ்மார்ட் சிட்டி தின் அனைத்து பணிகளும் தூரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி 1, 2, 3 ஆகிய வார்டுகளில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்காமல் போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வஉசி சந்தையில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம், போல்டன் புரத்தில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, ராமசந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ். கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், வைதேகி, சரவணக்குமார். ராமர், அதிஷ்டமணி, ரிக்டா, ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, விஜயகுமார். முத்துவேல், இசக்கிராஜா. சரண்யா. சோமசுந்தரி, ரெங்கசாமி, ராமகிருஷ்ணன், கந்தசாமி, பொன்னப்பன், பேபி ஏஞ்சலின், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கம்யூனிஸட் கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, இந்திய யூனியன் முஸ்ஸீம்லீக் மும்தாஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டல தலைவர்களுக்கு முன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் முதல் கூட்டம் என்பதால் மேயர் சார்பில் அனைவருக்கும் ரோஜாப்பூ
உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கொடுக்கப்பட்டு வரவேற்றனர். பல உறுப்பினர்கள் மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளிக்கையில் கடந்த பதிலளிக்கையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செய்த பல குறைபாடுகளால் சில பணிகள் தடைப்பட்டிருந்தன. இனி அப்படி ஒரு நிலை இருக்காது. மழைக்காலத்திற்குள் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று மாநகராட்சிக்கு நடைபெற்று வருகின்றனர். துறைமுகம் சார்பில் வரவேண்டிய பாக்கித் தொகையை வசூலிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் அனைவற்றிலும் எந்த குறைகளுக்குமின்றி நிறைவேற்றுவோம் என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *