சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மதுரையில் இரு வெவ்வேறு இடங்களில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் தலைமையில் தமிழக அரசு உயர்த்திய வீட்டு வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டியல் அணி மாநில தலைவர் பாலகணபதி, பொதுச் செயலாளர்கள் ஜோதிமணி வண்ணன், பாலமுருகன், செல்வகுமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் தனலட்சுமி, மாவட்ட பொருளாளர் மோகன்குமார், அரசியல் தொடர்பு மாநிலத் தலைவர் ராஜரத்தினம், ஓபிசி பிரிவு பாலா, வில்லாபுரம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மதுரை மூன்று மாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்டம் சார்பில் புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர்கள் மகேந்திரன், கோவிந்த மூர்த்தி, இளைஞரணி மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட தலைவர் அறிவுசார் பிரிவு சந்தோஷ் சுப்பிரமணியம், ஊரகம் மற்றும் நகர் வளர்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் கட்கம் ரவிச்சந்திரன், விவசாய அணி துணைத் தலைவர் புல்லட் ராமர், வண்டியூர் மண்டல் தலைவர் பால்சாமி, மண்டல் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைதலைவர் சிபி.பாஸ்கரன், 5வது வார்டு செயலாளர் ஜாக்சன் துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட துணைத்தலைவர் மேலூர் தர்மலிங்கம், இளைஞர் அணி மாவட்ட தலைவர் மேலூர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை ஹரிகரன், சிறுபான்மை அணி தலைவர் ராயப்பன், கே.ராமர், மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.