நபார்டு வங்கி நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டுநிறுவனம், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட குழுவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி
சேலம் மாவட்டம் , அரங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டுநிறுவனம், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட குழுவுடன் இணைந்து பல திட்டங்களை கடந்த மூன்று வருடமாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் தொழில்நுட்பங்களை கையாளுவது பற்றியும், மேலும் இயற்கை விவசாயம் சார்ந்த இதர பல விவசாய உத்திகளை ப்பற்றி இலவச பயிற்சி வழங்கப்பட்டது .
இந்த பயிற்சியில் விவசாய தொழில்நுட்ப ஆலோசகர்கள் திரு நரசிம்ம ராஜ் அவர்களும், திரு மணிவண்ணன் அவர்களும் சிறப்பாக பயிற்சி அளித்தனர். உலகம் வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையிலும், அதன் காரணமாக விவசாயத்தை பாதிக்கும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலும், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களான சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மற்றும் வறட்சியைத் தாங்கும் முருங்கை, பப்பாளி ,சீமை இலந்தை போன்ற தோட்டக்கலை பயிர்களை பற்றியும் திரு நரசிம்ம ராஜ் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்.
அதுபோல் நமது மண்வளத்தை காப்பாற்றி , உடல் சுகாதாரத்தை பேணும் வகையில் இயற்கை விவசாய முறைகளைப் பற்றியும், மேலும் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்ககளான பெரமோன் டிராப் மற்றும் இயற்கை திரவங்கள், மீன் அமிலம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல், இன்னும் பலவற்றை தயாரிக்கும் முறை ,மேலும் அவைகளின் நன்மைகளைப் பற்றி திரு மணிவண்ணன் அவர்கள் பயிற்சி கொடுத்தார். மேலும் இயற்கை முறையில்,
கறவை மாடுகளை தாக்கும் நோய்களிலிருந்து காப்பாற்றும் முறைகள், மற்றும் சரிவிகித தீவன முறைகள், அசோலா வளர்ப்பு பற்றி தெளிவாக பயிற்சியாளர்கள் இருவரும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்கள்.
ஆர்வத்துடன் பங்கேற்ற 40 விவசாயிகளும் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்டும் தெளிவுபடுத்தி ,இந்த பயிற்சியில் கலந்து கொண்டது பற்றி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பினை ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட குழுவின் தலைவர் திரு ஆர் கார்த்திக் அவர்களும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் திரு கணேஷ் மற்றும் திட்ட பொறியாளர் திரு ஹரி அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.