இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் முடங்கி போவார்கள். வெளியூர்களில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். அலங்காரமாக உடை உடுத்துவதில் விருப்பம் கொள்வீர்கள். கவலைகள் மறந்து போகும். கடன்கள் குறைந்து போகும். வேலை பார்ப்போர் மனநிறைவுடன் இருப்பார்கள். உறவுகளால் செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
லாட்டரி யோகம் இன்று உங்களுக்கு உண்டு. பணவரவு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் துறையில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். குழந்தைச் செல்வம் உருவாகும்.
மிதுனம்
கடுமையான உழைப்பு இருந்தால் அதற்குரிய பலனை பார்க்கலாம். மற்றவரிடன் ஏமாறுவதை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள்.எண்ணிப் பார்த்து செலவு பண்ணுங்கள். இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின் கல்விச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போங்கள்.
கடகம்
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என வருத்தப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கே. பெண்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. அது வீட்டிலும் இருக்கலாம் வெளியிலும் இருக்கலாம் உங்கள் சாய்ஸ்…தொழில் துறைகள் மந்தமாக இருக்கும்.வியாபாரம் கண்ணாமூச்சி காட்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தள்ளிப்போடுங்கள்.
சிம்மம்
பக்குவமாக நடந்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். தொழில்துறைகள் விரிவடைந்து மனமகிழ்ச்சியை தரும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களுக்கான ஏற்பாடுகள் நடக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கைநிறைய செல்லவும் செய்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலவும்.
கன்னி
தடைப்பட்டுப் போன வீட்டு வேலைகளை தாராளமாக தொடங்கலாம். தொழில் முதலீடுகள் பயமின்றி செய்யலாம். வியாபாரத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் ஆடம்பரத்திற்கு அணை போடுங்கள். வாகனம் வாங்க யோகம் உண்டு. சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள். மனைவி மக்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள் நினைத்த காரியம் தாமதமின்றி நிறைவேறும் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் இருக்கும் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் மடங்காக திரும்ப வரும் வாழ்க்கை துணைக்கு நகை வாங்கி அழகு பார்த்தீர்கள் பிள்ளைகள் நல்ல பெயர் எடுத்து உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள் வீட்டுச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்..
விருச்சிகம்
வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்விவேகத்தைக் கூட்டி கொள்ளுங்கள் இல்லை என்றால் சில இடர்ப்பாடுகளை சந்திக்க நிலை உருவாகும்நாணயத்தைக் காப்பாற்றி பாடுபடுவீர்கள் அவசிய செலவுக்கும் கடன் வாங்க நேரிடும் தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் வெளியூர் பயணங்களை தண்ணீரை எங்கள் புதிய தொழிலில் முதலீடு வேண்டாம் வியாபாரம் சம்பந்தமாக நடக்கும்.
தனுசு
கடுமையான உழைப்புக்கு பின்பே முழுமையான வெற்றி கிடைக்கும் காரியத்தடை வீரியத்தை குறைக்கும் வீட்டுக்குள் ஏட்டிக்கி போட்டி. சிலருக்கு வீட்டில் இருக்கவே பிடிக்காது. தொழில் துறைகளில் சீரான போக்கு காணப்படும் பிள்ளைகளின் பிடிவாதம் கோபத்தை உண்டாக்கும் கடன்காரன் தொல்லை கவலை தரும்.வேலை செய்யும் இடங்களில் தேவையில்லாத விஷயத்தில் தலையிடக் கூடாது.
மகரம்
வீடுதேடி வரும் வம்பு விலகி நில்லுங்கள் தொழிற்சாலையில் மின்சார சாதனங்கள் பழுதடைய வாய்ப்பு உண்டு வேலை பளுவின் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும்வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் மனைவியின் திட்டுக்களை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுங்கள் பிள்ளைகளால் பிரச்சனை உருவாகாமல் கண்காணியுங்கள் மருத்துவச் செலவுகளும் மல்லுக்கட்டும்.
கும்பம்
வேண்டுதலை நிறைவேற்ற ஆலயங்களுக்கு செல்வீர்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் செலவுகள் கை மீறிப் போகும் தொழில்துறைகள் செம நோக்கோடு நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் கடினம் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை வெளியூர்களில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் தாராள பிரபு. செலவு செய்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள் உறவினர்கள் உதவி உங்களுக்கு உண்டு பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தை தரும் லாட்டரி பந்தயம் போன்றவற்றில் கவனமுடன் விளையாடுங்கள் சுவையான உணவுகளை தேடி வந்தீர்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள்