மதிப்பு மிக்க தலைமை செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் இல்லம் தேடி கல்வி மையங்களில் கலக்கும்  தன்னார்வலர்கள் ஒளிரும் மாணவர்களின் திறமைகள். மிளிரும் தமிழக கல்வித்துறை

Loading

மதிப்பு மிக்க தலைமை செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

இல்லம் தேடி கல்வி மையங்களில் கலக்கும்  தன்னார்வலர்கள் ஒளிரும் மாணவர்களின் திறமைகள். மிளிரும் தமிழக கல்வித்துறை.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் அவர்களின் ஆலோசனையின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின்படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இந்திரா நகர், குமரன் காலனி குடியிருப்பில் செயல்பட்டு வரும்
இல்லம் தேடி கல்வி மையங்களில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் இ.தங்கராசு,  அ.ரகமதுல்லா    அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராக்கினி மேரி மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர் ஹென்றி  ஆகியோர் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை
பார்வையிட்டனர்.
முன்னதாக ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கான ஊக்கப்படுத்துதல் கூட்டத்தில் தன்னார்வலர்கள்  சுகுணா தேவி, குணசுந்தரி, சரண்யா, சித்ராதேவி, ஜோதிகா, மணிமேகலை மற்றும் ப்ரீத்தி ஆகியோர்  கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராக்கினி மேரி மற்றும் ஆசிரியர் ஹென்றி ஆகியோர் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தியதோடு, அவர்களுடைய செயல்பாடுகளை பாராட்டினர்.  இத்திட்டத்தை தொடர்ந்து  எவ்வாறு மாணவர்கள் பயனடையுமாறு சிறப்பாக கொண்டு செல்வது என்று கலந்துரையாடினர்.
பள்ளியில் உள்ள  கற்றல்-கற்பித்தல் வளங்களை அவர்கள்  பயன்படுத்திக் கொள்ளவும், பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் தன்னார்வலர்கள் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது. . மேலும் சென்ற மாதங்களுக்கான ஊக்கத்தொகை பெறப்பட்ட விபரம், தன்னார்வலர் பெற்றோர் watsapp குழு உருவாக்கம் போன்ற தகவல்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கள் கேட்டறிந்தனர்.   இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் மகிழ்ச்சியாக செயல்பாடுகள் செய்வது   பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
0Shares

Leave a Reply