நடிகர்விஜய் நடித்துள்ளபீஸ்ட் திரைப்படத்தைதடைசெய்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தி உள்ளது

Loading

நடிகர்விஜய் நடித்துள்ளபீஸ்ட் திரைப்படத்தைதடைசெய்க
தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தி உள்ளது
இதுகுறித்து அதன் நிறுவனதலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபாஉள்துறைசெயலாளர் எஸ்.கே.பிரபாகருக்குஎழுதியுள்ள கடிதம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,விஜய் நடிப்பில் உருவாகியுள்ளதிரைப்படம் ‘பீஸ்ட் இந்தபடத்தில் விஜய்க்கு ஜோடியாகநடிகை பூஜா ஹெக்டேநடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்குஅனிருத் இசையமைத்துள்ளார்.வருகின்றஏப்ரல் 13-ம் தேதி,தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு  ‘பிஸ்ட்’ திரைப்படம் வெளியாகஉள்ளதாகசன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர்விஜய் நடித்துள்ளபீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களைதீவிரவாதிகளாசித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களைதீவிரவாதிகளாகசித்தரித்துவருவதைவழக்கமாககொண்டு, இஸ்லாமியர்கள் என்றதீவிரவாதிகள் என்றதோற்றைதிரைத்துறையினர்உருவாக்கிவருகின்றனர்.

தங்களதுசாதிஅடையாளம் மற்றும் சாதிதலைவர்களின் பெயர்களை கூட திரைப்படகதாபாத்திரங்கள் இடம்பெற்றால் அதற்குகடும் எதிர்ப்புக்களைசமுதாயஅமைப்புகள் தெரிவிப்பதைபார்த்துவருகிறோம்.ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு,துப்பாக்கிகலாச்சாரத்தில் ஈடுபட்டுநாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராகசெயல்படுவதுபோலதொடர்ந்துதிரைபடங்களில் காட்சிகள் இடம்பெறுவதுமிகவும் வேதனைஅளிக்கக்கூடியவிஷயமாகஉள்ளது.

2015 பெருவௌ;ளத்தின் இஸ்லாமியஅமைப்புகள் செய்தபணிளையாரும் மறந்துவிடமுடியாது. கொரோனாபேரிடரில் உயிரிழந்தவர்களைசொந்தபந்தங்கள் கூட தொடமறுத்தஉடல்களை,அடக்கசெய்தவர்கள் இஸ்லாமியஅமைப்புகள் இப்படிபேரிடர்என்றுவந்துவிட்டால்,தங்கள் உயிரையும் துச்சம் எனநினைத்துகளத்தில் இறங்கிநிவாரணபணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்றுவரைசெய்துவருவதையாரும் மறுக்கமுடியாது.

உண்மைநிலை இப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்களைதீவிரவாதியாகபீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாகதகவல்கள் வெளியாகிஉள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனிதரமலான் மாதத்தில் நோன்பைகடைபிடித்துவருகின்றனர்.இந்த சூழலில், இஸ்லாமியர்களைதீவிரவாதிகளாகசித்தரித்துள்ளநடிகர்விஜய் நடித்துள்ளபீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதிவெளிவந்தால், இஸ்லாமியர்களிடையேஒரு இணைக்கமான சூழல் ஏற்படும். ஆகவேஅசாதாரண சூழலைகருத்தில் கொண்டு,பீட்ஸ் திரைப்படம் வெளியிட   தடைவிதிக்கவேண்டுமெனதமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *