இன்றைய ராசி பலன்

Loading

மேஷம்


மேஷம் ராசிக்காரர்களே, சந்திரன் உங்களுடைய ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு நீங்கள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இருப்பீங்க. இன்று உங்களுக்கு பணம் தாராளமாக வரும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மைகள் நடைபெறும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிப்பதால் திடீர் விரைய செலவுகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம் கவனம். வீட்டில் பொறுப்போடு நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும்.

மிதுனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எடுத்த காரியம் வெற்றியாகும். சொந்த பந்தங்களினால் நன்மைகள் நடக்கும். இன்றைய தினம் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

கடகம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணிக்கிறார். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. வேலை விசயமாக புதிய வாய்ப்புகள் வரலாம். யோசித்து முடிவு செய்யுங்கள். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள், மனைவி வழி உறவினர்களால் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் வியாதிகள் விலகும். சந்தோஷமான நாளாக அமையும்.

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. குடும்பத்தில் தேவையில்லாத மனக்குழப்பம் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்த்து விடவும்.

துலாம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணிக்கிறார். ரொம்ப ஆரோக்கியமாகவும் நேர்மறை எண்ணங்களோடும் இருப்பீங்க. பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம் என்று நினைப்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். திருமண வரன் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசிக்கு 6ஆம் வீட்டில் பயணிக்கிறார். உங்க உடல் நலத்தில கவனம் செலுத்துங்க. கடன்கள் அடைபடும் அளவிற்கு பணம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பண முதலீடுகளில் கவனமாக இருங்க. இன்றைக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் தாராள பண வரவும், கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு வெற்றிகரமான நாள். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். உடம்பில் நோய்கள் வந்து நீங்கும். உங்களுக்கு சில பிரச்சினைகள் தேடி வரலாம் கவனமாக ஹேண்டில் பண்ணுங்க. குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். உற்சாகமான நாளாக அமையும்.

மகரம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டில் உள்ளவர்களின் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். வேலையில் இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கும்பம்


சந்திரன் உங்களுடைய ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். நிறைய நன்மைகள் நடக்கும். வசதிகள் பெருகும் நாளாக அமையப்போகிறது. நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு உற்சாகமான நாளாக அமையும்.

மீனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பணவரவு ஒரு பக்கம் வந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனமாக பேசுவது நல்லது.

0Shares