ரூ.400 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Loading

திருப்பூர்,
திருப்பூரை அடுத்த பல்லடம் வி.வடமலைபாளையம் கருடமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகரன் (22), விஜய் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள். நந்தகுமார் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். அவரிடம் மது குடிப்பதற்காக சுதாகரன், விஜய் ஆகியோர் சேர்ந்து ரூ.400 கடன் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நந்தகுமார், தனக்கு கொடுக்க வேண்டிய கடனை சுதாகரன், விஜய் ஆகியோரிடம் பொது இடத்தில் வைத்து திருப்பிக்கேட்டுள்ளார். இதில் சுதாகரன், விஜய் இருவரும் அவமானம் அடைந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து நந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 12.1.2020 அன்று சுதாகரன், விஜய் இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் கடனை திருப்பிக்கொடுப்பதாக கூறி நந்தகுமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து நந்தகுமாரை கல்லால் தாக்கியும், காலால் கழுத்தில் எட்டி உதைத்தும் சேர்ந்து கொலை செய்தனர்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுதாகரன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி கொலை குற்றத்துக்காக சுதாகரன், விஜய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *