விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்டல அலுவலகம் முன்பு அதிமுக வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்டல அலுவலகம் முன்பு அதிமுக வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137 வது வார்டில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அண்ணாசாலை, முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை போன்ற முக்கிய சாலைகளில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் கால்வாய்த்திட்டம் போன்ற பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறி இன்று கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருகம்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி தலைமையில், பகுதி செயலாளர் காமராஜ் முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மண்டல அலுவலரை சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டு மனு அளித்தனர். பின்னர் செய்திகளுக்கு பேட்டியளித்த விருகம்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் என்ற காரணத்தினால் கடந்த எட்டு மாதங்களாக அந்த பணிகளை திமுக அரசு முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார்.