கும்மிடிப்பூண்டியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 1569 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர் :

Loading

திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 3,00,970 ஆகும். இப்பதிவுதாரர்கள் உள்ளிட்ட இளைஞர்களின நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்று தான் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஆகும்.

அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பெருவாயல், கவரப்பேட்டை, டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக 181 தனியார் நிறுவனங்களும், திறன் பயிற்சி அளிப்பதற்காக 16 திறன்  பயிற்சி நிறுவனங்களும் பங்கு பெற்றன.  இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாயப்பை தேடி 42 மாற்றுத்திறனாளிகள் உட்பட 9709 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் ஆண்கள் 6175 நபர்களும், பெண்கள் 3534 நபர்களும் கலந்து கொண்டனர். வேலைவாயப்பை தேடி பங்குபெற்ற நபர்களில் 11 மாற்றுத்திறனாளிகள் உட்பட பணி நியமனம் பெற்ற 1569 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீர ராகவ ராவ் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்  டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), க.கணபதி (மதுரவாயல்),துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இயக்குநர் கா.ஜெகதீசன், வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் ஆ.அனிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, டி.ஜெ.எஸ். கல்வி குழும நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *