திருவள்ளூரில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.97 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

Loading

திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.16.97 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை 21 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்துவதற்காக ரூ.838 கோடி முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 61242 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1500 ஆக இருந்ததை,ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் வைத்துள்ளோர் 81 வகையான திட்டங்களில், தகுதியேற்ப பயன்பெறலாம்.இந்தியாவில் முதல் முறையாக நிகழாண்டு முதல் முதுகு தண்டுவடத்தால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோகமாக வடிவமைத்த இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் மற்றும் தாங்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை உடன் எடுத்துச் செல்லவும் வசதியாக ரூ.99777 மதிப்பிலான வாகனங்கள் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 101 பேருக்கு வாகனங்கள் வழங்க ரூ.79.63 லட்சம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முதுகு தண்டுவடத்தால் பாதித்த 19 பேருக்கு ரூ.15.81 லட்சத்தில் பிரத்யேக வாகனங்கள் வழங்கியுள்ளது என்று கூறினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply