மேட்டுப்பாளையத்தில் நெசவுத் தறிக்காரர்கள்  வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பாக மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Loading

இன்றைய தினம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம்
சிறுமுகை தியேட்டர் மேட்டில்
தமிழ்நாடு நெசவுத் தறிக்காரர்கள்
வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பாக
தற்போது பட்டு நூல் விலை அதிக அளவிலேயே ஏற்றம் செய்யப்பட்டுள்ளது
அந்தப் பட்டு நூல் விலையை குறைக்கக்கோரி
மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர்
டாக்டர் ஜி தேவராஜ் அவர்களும்
மாநில ஒருங்கிணைப்பாளர் விளம்பரம் ராமசாமி
இளைஞரணி தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில்
மாநில செயலாளர் புயல் கணேசன் அவர்கள் வரவேற்புரை கொடுக்க
இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர்
எம்பி ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்
இதில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த நெசவாளர் தொழிலாளர்கள்
ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து நெசவாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும்
நெசவாளர்களுக்கு முழுமையான இலவச மின்சாரம் வழங்க
நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி ஏற்படுத்தித் தர வேண்டும்
மற்றும்  பட்டு நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியும்
தற்போது நடைபெற்ற தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில்
நெசவாளர்களை பற்றி ஒரு எள்ளளவு கூட பேசவில்லை
ஆகவே தமிழக அரசு உடனே நெசவாளர் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் எனவும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசம் விட்டார்கள்
இறுதியாக இந்த இயக்கத்தின் பொருளாளர் எஸ் பி துரைசாமி அவர்கள் நன்றியுரை கூறினார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *