தேனி மாவட்டம் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன்,  கொடியசைத்து, துவக்கிவைத்தார்.

Loading

தேனி மாவட்டம்,   தேனி-அல்லிநகரம்   நகராட்சிக்குட்பட்ட   பங்களாமேடு   பகுதியில்,   உலககாசநோய்   தினத்தை   முன்னிட்டு,   செவிலியர்   பயிற்சி   பள்ளி   மாணவ,   மாணவியர்கள்,   தன்னார்வதொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்   க.வீ.முரளீதரன்,   கொடியசைத்து,   துவக்கிவைத்து,தெரிவித்ததாவது,
சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே   விழிப்புணர்வு   ஏற்படுத்துகின்ற   வகையில்   உலக காசநோய்   தினம்   ஆண்டுதோறும் மார்ச்-24-ஆம்   அனுசரிக்கப்பட்டு   வருகிறது.   உலகில்   பல   உயிர்   கொல்லி   நோய்கள்   காலத்துக்கு  காலம் தோன்றி மனித குலத்தை பழிவாங்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வகையில், ஒரு காலத்தில் உயிர் கொல்லி நோயாக இருந்து. பொதுவாக காசநோய் டி.பி என அழைக்கப்படுகிறது.காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கினை நோக்கி நமது மாவட்டம் பயணிக்கின்ற வேலையில்   உலக   சுகாதார  நிறுவனம்  “காசநோயை   ஒழிக்க   முதலீடு  செய்யுங்கள்,   உயிர்களை காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளை இந்தாண்டு மையமாக கொண்டுள்ளது. தொடர் இருமல், காய்ச்சல்,பசியின்மை,   உடல்  எடை  குறைதல்  உள்ளிட்டவைகள்   கண்டறியப்பட்டால்   உடனடியாக   அருகில்  உள்ள  அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களில்   இலவசமாக   சளி   பரிசோதனை   மேற்கொண்டு,   100   சதவிகிதம்   காசநோயை குணப்படுத்திடலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து, காச நோயை ஒழித்திட முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என தெரிவித்தார்.உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி  தேனி-அல்லிநகரம்   நகராட்சிக்குட்பட்ட   பங்களாமேடு   பகுதியிலிருந்து,   பழைய   பேருந்து   நிலையம்   வரை சென்றடைந்தது. இந்நிகழ்வின் போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ஆர்.பாலாஜிநாதன்,   துணை   இயக்குநர் (மருத்துவ   நலப்பணிகள் –   காசநோய்) இரா.இராஜபிரகாஷ்,   செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply