உளுந்தூர்பேட்டை அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து பள்ளி மாணவிகளுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கிய துப்புரவு பணியாளர்
உளுந்தூர்பேட்டை அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து பள்ளி மாணவிகளுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கிய துப்புரவு பணியாளர்….!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டை,மார்ச்.25_
உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாதுரை துப்புரவு பணியாளரான இவர் சிறுவயதில் இருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் காட்டிவந்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து கற்காசுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
அப்போது நாணயங்களை பார்வையிட்ட மாணவர்களுக்கு பண்டைய காலத்தின் பண்ட மாற்று முறையில் இருந்து நாணயங்கள் வடிவமைக்கப்பட்ட பரிமாணங்கள் குறித்தும் பண்டைய கால நாணயங்கள் மன்னர் காலத்து கற்காசுகள் வெளிநாட்டு நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் அதன் மதிப்பு களைப் பற்றியும் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மாணவர்களிடம் நாணயம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொன்னவர்களுக்கு ரோட்டரி சங்கம் மூலம் பரிசு வழங்கப்பட்டது மாணவர்கள் நாணயங்களை கையில் எடுத்து ஆர்வத்துடன் பார்த்து சென்றனர் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ்பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்