வேலுார்ஆசிரியர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Loading

வேலூர் மார்ச் 24
வேலூர் மாவட்டம் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிகையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், கூட்டமைப்பின்மாவட்டஒருங்கிணைப்பாளருமான எ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாளதாஸ் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.மணி ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்.
0Shares

Leave a Reply