தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்

Loading

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் நகரின் மையப் பகுதியில் காய்கனி மார்க்கெட் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும், தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மார்க்கெட் வழியாக வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு புகார்கள் சென்றுள்ளது.
இதையடுத்து மாநகரமைப்பு அலுவலர் ரங்கநாதன் தலைமையில் உதவி அலுவலர்கள் ராமசந்திரன், ஆறுமுகம் நாகராஜன், காந்திமதி உதவி ஆணையர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை 100க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மத்திய பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், வேல்முருகன், இசக்கியப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபட்டனர்.
0Shares

Leave a Reply