முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

Loading

சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜர் ஆனார்.  இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ. பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: –  ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன்.
ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை எனக்கு சம்மன் அனுப்பியது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.  எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு”என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *