தலைவாசல் அருகே பங்குனி உத்தர திருவிழா நடைபெற்றது
![]()
தலைவாசல் , மார்ச் 21-
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வரகூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
பாலசுப்பிரமணியசாமி கோவில் தலைவாசல் அருகே வரகூர் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு பாலசுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு யாக பூஜை, கொடிமரம், பலிபீடம், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுதா பொன்னுசாமி ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன், ஜெயராமன், கிருஷ்ணன், செல்வகுமார், ஆகியோர் திரண்டு வந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மற்றும் கோலாட்டம் கொண்டாடி மகிழ்ந்தனர் . விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

