பத்திரிகைத்துறையின் நெருக்கடி நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செய்தி அலசல் ஆசிரியர் ராஜேந்திரன் வேண்டுகோள்

Loading

சென்னை, மார்ச் 21-
கொரானா நோய்த்தொற்று காலத்தில் இருந்து இப்போது வரை நீடித்து வரும் பத்திரிகை துறையின் நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்திஅலசல் நாளேட்டின் அனைத்து மாவட்ட செய்தியாளர் பயிற்சி பட்டறை சென்னை வளசரவாக்கத்தில் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது,இதில்செய்தி அலசல் நாளேட்டின் ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார் இந்த பயிற்சியின் போதுஅவர் பேசுகையில் ;
செய்தியாளர்கள் எளியமு றையில் செல்லிடப்பேசி மூலமாகவே தங்களது செய்திகளை விரைவாகவும் நிறைவாகவும் அனுப்பலாம் செய்தியாளர்கள் சமூக கண்ணோட்டத்தோடு செய்திகளை அனுப்ப வேண்டும் வேறு நோக்க த்தோடு செயல்பட்டால் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது வேறு வழியில் சம்பாதிக்கும் பணம், அவர்களை வேறு வழிக்கு அனுப்ப கூடும் பத்திரிகையாளர்கள் நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பணமே அவர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நான் அனுபவப் பூர்வமாகவே வேறுவிதமாக செயல்பட்ட பலரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன் அவர்கள் இப்போது செய்தியாளர்கள் ஆக இல்லாமல் பழைய வாழ்க்கை முறையையே கையாண்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களால் வெற்றிகரமான செய்தியாளர்கள் ஆக முடியவில்லை வாழ்க்கையையும் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் பத்திரிகை துறையில் நீடிக்க மாட்டார்கள் நாம் நிஜமான பத்திரிகையாளர்களாக முழு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்பொழுது சமூக வலைதளங்கள் மூலமாக. சிலர் செய்தியாளர்கள் என்று கூறி சில வார இதழ்களின் அட்டைப் படங்களை போடுகிறார்கள் ஆனால் அந்த வார இதழ்களின் அட்டைப்படங்களை அவை எந்த தேதியில் வெளியிடப்படுகிறதோஅன்று தான் போட வேண்டும் .குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக பதிவிட்டால் அது சட்டப்படி குற்றமாகும் அவர்களை சிறையில் தள்ளவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

கடந்த கொரோனாகாலத்தில் பத்திரிகை துறையே ஸ்தம்பித்தது. காகிதங்கள் உற்பத்தி முடங்கியது கிலோ 60 ரூபாய்க்கு விற்ற பத்திரிகை காகிதத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.பத்திரிகை காகிதத் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டன.இது ஒரு பக்கம் இருக்க பத்திரிகைகள் படிப்பதால் கொரானா பரவும் என்ற வதந்தியும் நிலவியது இதன் காரணமாக மக்கள் பத்திரிகைகளைப் படிப்பதை விட்டுவிட்டு இணைய தளங்களுக்கு மாறினர் வழக்கத்திற்கு மாறாக வாட்ஸ்அப் மூலம் செய்திகளோடு இணையதளங்களில் தொலைக்காட்சிகளையும் செல்போன் மூலமாகவே பார்க்கவும் படிக்கவும் தொடங்கினர் இதனால் மிக அதிக அளவுக்கு பத்திரிகைகளின் விற்பனை குறைந்தது கொரோனா நோய் த்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி இன்னமும் தீரவில்லை.இன்னமும் நீடித்த வண்ணம் இருக்கிறது .
எந்த நெருக்கடியையும் சந்திப்பதற்கும் சாதனை புரிவதற்கும் செய்தியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான் பத்திரிகைத் துறையும் முன்னேறும் பத்திரிகையாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தில் மேம்பாடு அடைய முடியும்.

இப்பொழுது பத்திரிகையாளர் வாரியம் ஒன்றை தமிழக அரசு அமைத்திருப்பது பாராட்டத்தக்கதாகும் வரவேற்கத்தக்கது இந்த வாரியத்தில் பத்திரிகை அதிபர்கள் மட்டுமல்லாமல் கடைநிலை செய்தியாளர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் இந்த வாரியத்தில் உள்ள பத்திரிகை அதிபர்கள்தாங்கள் கொ ரானா நோய்த்தொற்று காலத்தில் பட்ட துன்பங்களை சொல்லமுடியும் கடைநிலை பத்திரிகையாளர்களும் தங்களுக்கு நேர்ந்த. வேதனைகளை விவரிக்க முடியும் .இந்த பிரச்சினைகளை மூன்றாம் தரப்பாக இருந்து அரசு உரிய முறையில் தீர்வு காணமுடியும் அத்தகைய நோக்கத்தோடு உரிய நடவடிக்கை கள்மேற்கொண்டு பத்திரிகை துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைப்பார் என்று பத்திரிகையாளர்கள் ஆகிய நாம் நம்புகிறோம் இவ்வாறு அவர் பேசினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *