கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாணவர்கள் திறைமைகளை வெளிபடுத்தும் நிகழ்ச்சி
சென்னை, மார்ச் 18-
கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வீட்டு அறிவியல் துறை – உள்துறை வடிவமைப்பு மற்றும் அலங்காரம் துறை ஜெனித் அசோசியேஷன் சார்பாக மாணவர்கள் திறைமைகளை வெளிபடுத்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருமதி.பௌசியா ஜியா முதன்மை வடிவமைப்பாளர், உன்னார்ச்சி டிசைன் ஹவுஸ் வருகைதந்து மாணவிகளின் திறமைகளை ஊக்கபடுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.இதில் துறைத் தலைவர் டாக்டர்.வி.மீனா உதவி பேராசிரியர்கள் திருமதி பி.எஸ்.கவிதா,திருமதி.ஏ.நிர்மலா ஃபௌஸ்டா,செல்வி ஆர்.அமுதா,திருமதி கே.ஆயிஷா பானு,திருமதி கே.எம்.சரோஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தும். ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகனஶ்ரீ,துணை முதல்வர் பி.பி.வனிதா ஆகியோர் ஆலோசனை படியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உள்துறை வடிவமைப்பு மற்றும் அலங்காரத் துறையின் முகப்புத் துறையின் உன்னார்ச்சி டிசைன் ஹெவுஸ் இன் முதன்மை வடிவமைப்பாளர் திருமதி.பெளசியா ஜியா முதன்மை வடிமைப்பாளர் மாணவிகளின் கலை திறன்,பானை அலங்காரம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்தெடுத்து பரிசுகளை அறிவித்தார்.மாணவர்கள் கலைப்பொருட்கள், பேக்கரி,வீட்டு அறிவியல் கலை,பேஷான் டிசைனிங், போன்ற திறமைகள் கண்கா ட்சிகளில் இடம்பெற்று காட்சி பொருட்கள் விற்பனைக்கு வைக்கபட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.