5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

Loading

சென்னை , மார்ச் 18-
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. இதனால் மாதாந்திர உதவித்தொகையை 40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து , கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு;
தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500/- இனி ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி ,அதற்காக முதற்கட்டமாக ரூ.31,07 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

மனவளர்ச்சி குன்றியவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், பார்கின்சன் நோய்,நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புடையவர்கள் உதவித்தொகையை ரூ.,2000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2,15,505 லட்சம் பேர் பயனடைவார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *