டெபாசிட் “ஒரு கோடியா” அதிரும் ஈரோடு மார்க்கெட் வியாபாரிகள்

Loading

ஈரோடு மார்ச் 16-
ஈரோடு மாநகரில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய குத்தகைதாரர் டெபாசிட் தொகை ரூ 100 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை மொத்தமாக நேரடியாக ஏல விற்பனை செய்வதற்கும் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் மறுவிற்பனை,, சில்லறை விற்பனை ஆகியவை நடைபெறுவதற்காக வ ஊ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 1100 கடைகள் செயல்பட்டு வருகிறது இதை ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது ,தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் குத்தகைதாரர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் டெண்டர் கோரப்பட்டு டெண்டர் படிவத்தில் ஏலத்தில் பங்கு பெறும் முன்பு விதிமுறைகள் டெபாசிட் கடைகள் விபரம் ஆகியவை விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் ஆனால் தற்பொழுது டெபாசிட் தொகை மாநகராட்சி ஏலம் ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பில் 6 வது காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் ஒப்பந்ததாரர் முன்வைப்பு தொகை ரூ 100 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள், குத்தகைதாரர்கள், விவசாயிகள் ஆகியோர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது “ஒரு கோடி” முன்பணம் ஏலத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஏலமானது 7,8,9,கோடி அளவில் பெரும் போட்டியை சந்திக்க கூடிய சூழ்நிலை தற்போது நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் இப்படி போட்டி போட்டு எடுக்கும் பட்சத்தில் சாதாரண ஏழை வியாபாரிகள், விவசாயிகள் அதில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் ஏலம் விடுவதை தவிர்த்து நேரடி வாடகை வசூல் செய்ய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவே புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நல்லதை செய்யும் என்ற எண்ணத்தில் மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கியுள்ளனர்.

இதுபோன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளை மாலையாக அணிந்து இனி எங்களது வியாபாரம் கேள்விக்குறி என்பதை உணர்த்தும் வகையில் மாலையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர் தமிழக அரசு விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே விவசாயிகள் விளைபொருள்கள் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்க வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் அப்பொழுதுதான் விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து பொருள்களை வாங்க முன்வருவர் வியாபாரிகளின் கோரிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் கலந்தாய்வு செய்து ஏலத்தை தவிர்த்து நேரடியாக கடை வரிவசூல், வாடகை வசூல் ஆகியவை , மேற்கொள்ளப்பட்டால் பல ஆயிரம் வியாபாரிகளின் வாழ்வாதாரமாக திகழும் நேதாஜி தினசரி மார்க்கெட் சிறப்படையும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *