கோபிசெட்டிபாளையம்; காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

Loading

கோபிசெட்டிபாளையம், மார்ச் 15-
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மல்லிபாளையம் கிராமத்தில் சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் JKK வேளாண் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே சாத்தியமாகும் என கருதிய சிப்பி காளான் வளர்ப்பு நம் ஊரிலும் செய்யமுடியும் என செய்து காட்டியுள்ளார். காளான் வளர்ப்பு மிகவும் லாபம் தரக்கூடிய தொழில். காளான்களை உற்பத்தி செய்யப் பயிற்சி பெற்று முறையாக பராமரித்தால் நிச்சயமாக லாபம் ஈட்டக்கூடிய விவசாயமாக இருக்கும். தென்னை ஒலை மூலம் கொட்டகை அமைத்து, அதனுள் வெளிச்சம் புகாத வண்ணம் சணல் சாக்கு பைகளால் திரை அமைத்து, சிறிய வகை ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் தெளித்து குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

பின்னர் பிளாஸ்டிக் பைகளில் வைக்கோல், காளான் விதைகள், மற்றும் அதன் வளர்ச்சிக்கு தேவையான மூலப்பொருட்களை அடைத்து அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காளான் வளர்ப்புக்கு தேவையான மூலப்பொருட்களான பிளாஸ்டிக் பைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். காளான் விதை மற்றும் கிருமி நீக்கம் செய்ய பட்ட வைக்கோலை பிளாஸ்டிக் பைகளில் நிரப்புவதற்கு முன்பாக கைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.20- 25 நாட்களுக்குள் காளான் அறுவடைக்கு தயாராகிவிடும். தினசரி 7 முதல் 8 கிலோ காளான் கிடைக்கிறது.

இது வெளி சந்தையில் ஒருகிலோ 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 வருமானமாக ஈட்ட முடியும். இதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். அதே போல் உற்பத்தி செய்யப்படும் காளான்களை சரியான முறையில் சந்தை படுத்தவும், அதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புதிதாக காளான் பண்ணைகளை அமைப்போர் தாங்கள் உற்பத்தி செய்யும் காளான்களை சந்தைப்படுத்துவது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காளான் துறையை அணுகினால் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக JKK கல்லூரி மாணவிகளால் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரிய பண்ணைகளாக இல்லாமல் சிறு சிறு பண்ணைகளாக வீட்டிலேயே அமைத்து காளான் வளர்ப்புத் தொழிலை செய்ய முடியும் என்பது குறித்தும் மாணவிகளால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply