தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த 15 ஆண்டுகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம்

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விக்ரவண்டி,பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த 15 ஆண்டுகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் நடந்தது. நகர செயலாளர் உத்தராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் கலந்து கொண்டு மறியலின் நோக்கங்களை குறித்து பேசினார். நகர குழு உறுப்பினர்கள் தினேஷ், சங்கர், ராஜேந்திரன் ,Gமுகமது நிசார் அகமது, பாண்டுரங்கன், ஜெயராம், நடராஜன், வசந்தா, வட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர், குமரகுருபரன், பூர்வ சந்திரன், மஞ்சுளா, கணேசன், சரவணன் 70க்கு மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply