காங்கிரசுடன் இணைந்து போட்டியிட தயார்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

Loading

புதுடெல்லி, மார்ச் 12-
2024- ஆம் அண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியம் அற்றது” என்றார்.
பாஜக- காங்கிரஸ் அல்லாத மாற்று கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள்வதற்கான முன்முயற்சி யகவே பார்க்கப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *