இந்தியாவை உலகளாவிய தினை மையமாக மாற்றுதல் 2023-ம் ஆண்டு சர்வதேச தினை வருடமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவை உலகளாவிய தினை மையமாக மாற்றுதல்
2023-ம் ஆண்டு சர்வதேச தினை வருடமாக அறிவிக்கப்பட்டுள்ளது
டாக்டர் கே சி கும்மகோல்மத்,
இயக்குநர்,
மேனேஜ் (தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனம்), ஹைதராபாத்.
ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சூப்பர் தானியங்களாக தினைப் பயிர்கள் இந்திய துணைக்
கண்டத்தில் கருதப்படுகின்றன. அனைத்துத் தினை வகைகளும் மிகுந்த நன்மைகளைக்
கொண்டிருப்பதால் நுகர்வோர் தேவை மற்றும் உணவு முறைகள் மெதுவாக மாறி, சமீப
காலங்களில் இவற்றுக்கான சந்தையை உருவாக்கியுள்ளன.
நுகர்வோர் மத்தியில் வளர்ந்து வரும் சுகாதார உணர்வு காரணமாக மதிப்புக் கூட்டப்பட்டப்
பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு,
மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய
மாநிலங்களில் தினை வகைகள் முக்கியமாகப் பயிரிடப்படுகின்றதன.
இந்தியாவில், 2000 மற்றும் 2019-க்கு இடையில் 108 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தினை
பயிரிடப்படுவதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவு வெளிப்படுத்துகிறது. உலகளவில்
தினைச் சந்தையின் மதிப்பு 2019-ல் $9 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு, $12.5
பில்லியன் டாலரை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய நுகர்வோராக இருக்கும்
இந்தியா, உலகளாவிய தேவையில் 38 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியாவிலும் உலகளவிலும் ஆரோக்கியமான
உணவுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தினை மற்றும் தினை சார்ந்த தயாரிப்புகளை
ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதன.
நேபாளம், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், துனிசியா, இலங்கை, ஏமன்
குடியரசு, லிபியா, நமீபியா மற்றும் மொராக்கோ ஆகியவை தினைகளின் முக்கிய ஏற்றுமதி
இடங்களாகும். 2019-20-ம் ஆண்டில், 205.2 கோடி (28.75 மில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள 8
லட்சம் மெட்ரிக் டன் தினைகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில், வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய
நாடுகளுடன் இணைந்து 2023-ம் ஆண்டை 'சர்வதேச தினை ஆண்டாக' அறிவிக்க இந்தியாவால்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒருமனதாக
ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணியில், தினை ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா
முன்னணியில் இருப்பதற்கான செயல்திட்டம் தேவை. இந்த செயல் திட்டத்தில் பின்வருவன
அடங்கும்:
1. தினை உற்பத்தி முறைகளின் இறுதித் தயாரிப்பு தரம் மற்றும் செலவுச் செயல்திறனை
மேம்படுத்துதல்.
2. பல்வேறு வேளாண்-சுற்றுச் சூழல்களின் கீழ் தினை விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டச்
செய்தல்.
3. தினையை ஆரோக்கிய உணவாகவும், தொழில்துறை தயாரிப்புகளுக்கான
மூலப்பொருளாகவும் மேம்படுத்துதல்.
4. செயல்திறன் மிக்க மதிப்புச் சங்கிலியைக் கொண்டிருப்பதற்காக உற்பத்திக்கு அருகாமையில்
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை செயலாக்க மையங்களை நிறுவுதல்.
5. உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள கார்ப்பரேட்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் ஆகியவற்றில்
தினையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரிக்க உதவுதல்