இன்றைய ராசி பலன்
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு வீடு தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் உங்க ராசிக்குள் வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
லாப ஸ்தானம் விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களால் பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.
கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிலும் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். இன்று பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு பிற்பகல் வரை ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பிற்பகல் 12.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு பின் நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
துலாம்
சந்திரன் பிற்பகல் வரை ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு பிற்பகல் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு இன்று நல்ல நாள். வீடு தேடி நல்ல செய்தி தேடி வரும் உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் ருண ரோக சத்ரு ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். இன்று கடன் பிரச்சினை நீங்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணம் நன்மையை தரும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் தேடி வரும் கவனம் தேவை.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு சாதகமாக பயணம் செய்கிறார். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.