கேரளாவில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக டாட்டூ கலைஞர் ஒருவரை போலீசார் கைது

Loading

கொச்சி,

கேரளாவில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக டாட்டூ கலைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருபவர் சுஜீஷ் பி.எஸ். இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

18 வயது பெண் ஒருவர் சஜீசின் ஸ்டுடியோவிற்கு டாட்டூ போட வந்தபோது அவர் மீது மை கொட்டியுள்ளது. அப்போது சுஜீஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு அந்த பெண் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சுஜீஷை சேரநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply