முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பத்மஸ்ரீ சாதனையாளர்கள் கவுரவம்

Loading

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி, வளாகத்தில் பசுமைப்புரட்சி பாதுகாவலராக அறியப்படுபவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீமதி. சாலுமரதா திம்மக்கா, காடுகளின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ஸ்ரீமதி. துளசி கவுடா, புகழ்பெற்ற பாடகர் டாக்டர் காயத்திரி சங்கரன் மற்றும் இளம் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர் செல்வி. யோகதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவை முன்னிட்டு, விருது பெற்றவர்களை முதன்மைக் கல்விப் பொறுப்பாளர் ஜெயந்தி ராஜகோபாலன்
மற்றும் முதுநிலை முதல்வர் கே.எஸ். பொன்மதி ஆகியோர் கௌரவித்தனர்.

0Shares

Leave a Reply