காரியாபட்டி அருகே S.கல்லுப்பட்டி கிராமப்புற பெண்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி செய்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவி
காரியாபட்டி அருகே S.கல்லுப்பட்டி கிராமப்புற பெண்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி செய்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வந்திருக்கும் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் காரியாபட்டி குழு 2 ல் மாணவி முபிதா காளான் வளர்ப்பு செய்முறையை S. கல்லுப்பட்டியில் கிராமப்புற மகளிருக்கான பொதுக்கூட்டத்தில் விளக்கி கூறினார். மேலும் அந்த செயல்முறையை செய்தும் காட்டினார். இதில் சோளம் விதைகளை கொண்டு காளான் வித்து வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறையை சாக்கு அல்லது பாலித்தீன் பைகள் பயன் படுத்தி அதன் பதம், ஈரப்பதம் , வெட்ப நிலை பராமரித்தல், மற்றும் அதன் அறுவடை முறைகளை எடுத்து விளக்கினார். இதன் மூலம் மகளிரும் சுயதொழில் செய்து தொழில் முனைவர் ஆகலாம் என மகளிரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செயல் முறையில் வைக்கோல் , காளான்வித்து பயன் படுத்தி சிப்பி காளான் மற்றும் பட்டன் காளான் வளர்ப்பு முறையை விளக்கினார். இந்த பொது கூட்டதில் மகளிர் சுய உதவி குழு தலைவிகள் , மற்றும் ஊரக பெண்கள் பங்கேற்றனர்.