அரசு கலைக் கல்லூரியில் சாலைபாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

Loading

பாலக்கோடு, மார்ச்.5-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் . செண்பகவள்ளி முன்னிலை வகித்தார்.
இதில் பேசிய மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும் சாலையில் பள்ளி மாணவ மாணவிகள் நடக்கும்போது வலதுபுறம் நடக்கவும் சாலையை கடக்கும் போது சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல்லுதல், பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிப்பது , 18 வயதுக்கு குறைவான மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது மீறி இருசக்கர வாகனத்தை இயக்கினால் அவருடைய பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். டூவீலர்களில் இருவர்தான் செல்ல வேண்டும் . மூன்று நான்கு பேர்பயணிப்பதால் எதிர்பாராது விபத்துக்களில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிடும். .இது மட்டுமல்லாது மொபைல் போனில் பேசியப்படி டூவீலரை ஓட்டுவதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது.சிலர் இதை ஒரு ஸ்டைலாகவே கடைபிடிக்கின்றனர். விபரீதம் நடந்தால் பாதிப்பு யாருக்கு என்பதையும் இவர்களும் உணர வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் நமக்கும் பொறுப்பு உண்டு என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.மேலும் வாகனத்தை இயக்கும் நபர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வேண்டும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் மீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவானந்தம் நன்றி தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *