அண்ணன் பார்த்து கொள்வார் என்று விட்டு விடாதீர் ; கனிமொழி அட்வைஸ்

Loading

சென்னை,
அண்ணன் பார்த்துக்கொள்வான்; அப்பா பார்த்து கொள்வார் கொள்வார் என்று விட்டு விடாதீர் என்று தேர்வு செய்யப்பட்ட நகரப்புற உள்ளாட்சி பெண் கவுன்சிலர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அறிவுரை கூறியுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பெண்மொழி என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டம்,எழும்பூர் கிழக்கு பகுதி திமுக சார் பில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வேலு தலைமை தாங்கினார்,அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டசென்னை மேயர் ப்ரியா ராஜன் மற்றும் மாநகராட்சி மன்ற பெண் கவுன்சிலர்களை வாழ்த்தி, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.இதன் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது கனவு நிறைவேறியுள்ளது.இதன் அடுத்த கட்டமாக பெண்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும்.அந்த காலம் வெகுதூரம் இல்லை.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் கிடைத்திருக்கிறது.பல தடைகளை தாண்டி உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இதை நீங்கள் சரியானமுறையில் பயன்படுத்த. வேண்டும்.அடுத்த தலைமுறையில் உள்ள உங்கள் மகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். அண்ணன் இருக்கிறார்.கணவர் இருக்கிறார் அப்பாவும் மகனும் இருக்கிறார்.பார்த்துக்கொள்வார் என்று விடக்கூடாது ,இது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு.உங்களால நிச்சயம் முடியும் நீங்கள் ஆளுமை பண்புடன் சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.இந்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளர் அருள்மொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்ரவிச்சந்திரன் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி மாமன்ற பெண் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *