இன்றைய ராசி பலன்

Loading

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விரைய செலவு ஏற்படும். சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு 11ஆம் வீடான லாப வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுக்க வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். பணத்தை சிக்கனமாக செலவு செய்வது நல்லது. இல்லாட்டி கடன் வாங்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வருமானம் வரும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். கவனமாக இருங்க வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் வெளியிடங்களிலும் மவுன விரதம் இருப்பது நல்லது.

கன்னி
சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சந்திரன் இன்றைக்கு உங்களுக்கு வெற்றிகளை தேடி தருவார். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்சினை நீங்கும். உறவினர்களிடம் வாங்க வேண்டாம் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேரங்களில் காரமான உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு சுகமான நாள் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவு இன்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதேபோல செலவுகளும் இருக்கும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரிக்கும். விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு பயணம் செய்வதால் தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். அகலக்கால் வைத்து விட்டு அவதிப்பட வேண்டாம்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும் உற்சாகம் கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *