பாலியல் உறவு கொண்ட நபர் மற்றும் இவரது நண்பர்கள் என மொத்தம் 4 நபர்கள் போக்சோ சட்டப்பிரிவுகளில் கைது
தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு மயக்க பொருள்
கொடுத்து பாலியல் உறவு கொண்ட நபர் மற்றும் இவரது நண்பர்கள் என
மொத்தம் 4 நபர்கள் போக்சோ சட்டப்பிரிவுகளில் கைது.
சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு உடல்நிலை
சரியில்லாததால், சிறுமியின் பெற்றோர் சிறுமியை விசாரணை செய்தபோது, சமூக
வலைதளத்தில் அறிமுகமான வசந்த் கிரிஷ் என்பவர் காதலிப்பதாக கூறி அழைத்துச்
சென்று மயக்க பொருளை உட்கொள்ள வைத்து, பாலியல் உறவு கொண்டதாகவும்,
பின்னர் மீண்டும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் உறவு கொண்டதாகவும்
சிறுமி தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தாய், W-27 வடபழனி அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-27 வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான
காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம்
மூலம் பல் மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த்கிரிஷ் என்பவர் அறிமுகமானதும், பின்னர்
வசந்த்கிரிஷ் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள்
கூறி சிறுமியை அழைத்துச் சென்று மயக்க பொருளை உட்கொள்ள வைத்து பாலியல்
உறவு கொண்டதும், இது போல பலமுறை நடந்து கொண்ட நிலையில், வசந்த்கிரிஷ்
அவரது நண்பர்கள், பாலசிவாஜி (எ) ரஞ்சித், விஷால் மற்றும் பிரசன்னா
ஆகியோருடனும் சிறுமியை பாலியல் உறவு கொள்ள வைத்து சுமார் 1 மாத காலம்
சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், W-27 வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ
உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் 1.வசந்த்கிரிஷ்,
வ/20, த/பெ.பாபு, எண்.78, மேலரத வீதி, கிருஷ்ணன் கோயில், நாகர்கோயில்,
கன்னியாகுமரி மாவட்டம், 2.பாலசிவாஜி (எ) ரஞ்சித், வ/25, த/பெ.முருகேசன், எண்.32,
சுப்பிரமணிய கோயில் தெரு, அலமத்துபெத்தி ரோடு, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்,
3.விஷால், வ/20, த/பெ.பெருமாள், எண்.74, கதிரவன் தெரு, கொளப்பாக்கம்,
சென்னை, 4.பிரசன்னா, வ/32, த/பெ.மாதவன், நித்யா பிளாட்ஸ், 6வது மெயின் ரோடு
நங்கநல்லூர், சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் யாரேனும் தொடர்பில் உள்ளனரா என தொடர்ந்து
விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் நால்வரும் விசாரணைக்குப் பின்னர் இன்று
(28.02.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.