தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்

Loading

தேனி மாவட்டம் , தேனி – அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று ( 27.02.2022 ) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் , நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , அவர்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி தெரிவித்ததாவது , போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயினை ஒழிப்பதற்கு வருடந்தோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது .

தமிழ்நாட்டில் 2003 – க்கு பிறகு போலியோ நோய் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை . தேனி மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தொற்று ஏற்படவில்லை . தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் கிராம புறங்களில் 700 மையங்கள் நகர் புறங்களில் 136 மையங்கள் என மொத்தம் 836 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் . அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள் , 480 ஊட்டச்சத்து மையங்கள் 28 பேருந்து நிலையங்கள் , 128 இதர இடங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1257 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

பொது சுகாதாரத்துறை , மருத்துவத்துறை , ஊட்டச்சத்துத்துறை , மகளிர் திட்டம் , உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றுள்ளனர் . சாலை ஓரம் குடியிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் , செங்கல் சூளை , மலை பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்கள் , நகராட்சி குடிசை பகுதிகள் என மொத்தம் 127 இடங்கள் கண்டறியப்பட்டு சிறப்பு குழுவின் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . முகாம் நடைபெறுவதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக 8 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துக்கொண்டார் . இம்முகாமில் துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) ஜெகவீரபாண்டியன் , உதவி இயக்குநர் ( பொது சுகாதாரம் ) கே.சாமி , மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கோகிலா , வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் , மருத்துவ அலுவலர் கீர்த்தி , நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முகமதுசுல்தான் , கோபாலகிருஷ்ணன் , சரவணன் , செவிலியர்கள் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *