தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்
சென்னை, பிப்- 27
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி வரும் மார்ச் 1 ம்தேதி தொண்டர்களை சந்திக்கிறார்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வரும் மார்ச் 1 ம்தேதி கொண்டாடப்படுகிறது, பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் திமுக தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் ஸ்டாலின் வாழ்த்து பெறுவது வழக்கம், அதற்காக சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் அந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவிப்பர் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தால் பிறந்தநாளன்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களிடம் வாழ்த்து பெறவில்லை, இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று குறைந்ததன் காரணமாக அதற்கான பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திமுகவினர் முடிவெடுத்துள்ளனர், வரும் மார்ச் 1 ம்தேதி காலை 7 மணிக்கு கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி , நினைவிடங்களுக்கும் வேப்பேரியில் உள்ள பெரியார் சமாதிக்கும் சென்று முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்துகிறார்,
இதைத்தொடர்ந்து சென்னை தேனாம் பேட்டை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்திற்கு அன்று காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார், அங்கு திமுக தொண்டர்கள் முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெறுகிறார், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களிடம் வாழ்த்து பெறவில்லை, வரும் மார்ச் 1 ந்தேதி தனது 69 வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கி்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் கொண்டாடப்படும் ல முதல் பிறந்தநாள் என்பதாலும் உள்ளாட்சித்தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக மகத்தான வெற்றி பெற்றதன் காரணமாக இந்த ஆண்டு வழக்கத்தை விட உற்சாகத்துடன் திமுகவினர் திரண்டு வர வாய்ப்பிருக்கிறது, இதைத்தொடர்ந்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்,
.