அன்னை அரியூர் மலைவளத்தை பாதுகாக்க போராட்டம் நடத்திய எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா கைது.
இயற்கை சூழலுக்கு அரணாகவும், அனைத்து தரப்பட்ட உயிர்களுக்கும், தாவரங்களுக்கும், பல்லுயிர்
பெருக்கத்திற்கும் பாதுகாப்பாக உள்ள அன்னை அரியூர் மலைவளத்தை அரசாங்கத்தின் துணையோடு-
கார்ப்பரேட் நிறுவனங்கள் மலை மண்ணுக்காகவும்(எம்-சாண்ட்), கிராணைட்டுக்காகவும், பல்வேறு
தாதுப்பொருட்களை பிரித்தெடுக்கவும் தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கப்படுவது பேரழிவுக்கு
வழிவகுக்கும்.
கன்னியாகுமரி தொடங்கி, குஜராத் வரை பரந்த இயற்கை வளம் நிறைந்த பகுதியாக உள்ள மேற்கு தொடர்ச்சி
மலையின் ஒரு அங்கமாக திகழும் அன்னை அரியூர் மலை அனைத்து உயிர்களுக்கும் தேவையான
ஏறக்குறைய 75 சதவீத நன்னீரை தருகின்றது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கணக்கெடுப்புபடி
கடந்த 10-ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை மற்றும் அதன் கிளை மலைகள்
ஏறக்குறைய 15 சதவீதம் அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நொறுக்கப்படும் அன்னை அரியூர் மலையை பாதுகாக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி
இன்று(26.2.2022) காலை 11.00 மணி அளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில், வடக்குப்புதூர்
பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த லட்சிய ஜனநாயக
கட்சியின்(எல்ஜேகே) நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா மற்றும் தொண்டர்களும், பல அமைப்புகளை
சார்ந்த பலரை தமிழக காவல்துறை கைது செய்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மிகவும் பதட்டமான சூழலில் அப்பகுதிக்கு விரைந்த சிவகிரி வட்டாச்சியர் தொடர் பேச்சுவார்தை நடத்தி,
விரைந்து அனைத்து துறைசார்ந்த வல்லுனர்கள் குழுவை அமைத்து, அன்னை அரியூர் மலைப்பகுதியில்
விரிவான ஆய்வை மேற்கொண்டு அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அமைச்சரிடம்
கொண்டுசென்று மலை வளத்தை முழுமையாக பாதுகாக்க தீவிரமாக செயலாற்றுவதாக உறுதியளித்தார்.
மலை வளம் முழுமையாக பாதுகாக்கும் வரை எல்ஜேகே அயராது களமாடும் என அதன் நிறுவனத்தலைவர்
நெல்லைஜீவா தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார்.