5,529 காலி இடங்களுக்கான குரூப்-2, 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ந் தேதி கடைசி நாள்

Loading

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நேர்முகத்தேர்வு பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (11 இடங்கள்), நன்னடத்தை அலுவலர் (2 இடங்கள்), உதவி ஆய்வாளர் (19 இடங்கள்), சார் பதிவாளர் நிலை-2 (17 இடங்கள்), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி-8 இடங்கள்), சிறப்பு உதவியாளர் (1 பணியிடம்), தனிப்பிரிவு உதவியாளர் (58 பணியிடங்கள்) என மொத்தம் 116 இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளில் தேர்வு நடத்தப்படும்.

இதேபோல், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளான, நகராட்சி ஆணையர், நிலை-2 (9 பணியிடங்கள்), முதுநிலை ஆய்வாளர் (291 இடங்கள்), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளார் (972 இடங்கள்) உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இடங்களுக்கு முதல்நிலை, முதன்மை ஆகிய 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

மார்ச் 23-ந் தேதி கடைசி நாள்

அதன்படி, இந்த 5 ஆயிரத்து 529 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வு 200 கொள்குறி வகை வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க இருக்கிறது.

கட்டாய தமிழ் மொழி

அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் முதன்மைத் தேர்வை பொறுத்தவரையில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு 100 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு 300 மதிப்பெண்ணுக்கும் கேட்கப்படும். நேர்முகத்தேர்வு உள்ள பணிகளுக்கு நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பான முழு விவரங்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அதில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *