ஒரு பெண் போலீசுடன் கள்ள தொடர்பு;கைது செய்யப்பட்ட தாசில்தார்

Loading

ஒரு பெண் போலீசுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்த தாசில்தார் ,அந்த காதலியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்

உத்தரபிரதேச மாநிலம் ,பாரபங்கியில் உள்ள அசந்த்ரா காவல் நிலையத்தில் ருச்சி சிங் என்ற 25 வயதான பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார் .

அவர் அந்த மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் வசித்து வந்தார் .அங்குள்ள காவல்துறை தலைமையகத்தில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் ருச்சி சிங்,
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் பகுதியில் பணியாற்றும் ஒரு தாசில்தாருடன் கள்ள தொடர்பு கொண்டிருந்தார்.அந்த தாசில்தாருக்கு ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பம் ,குழந்தைகள் இருக்கின்றனர் .
இந்நிலையில் அந்த பெண் போலீஸ் ருச்சி சிங் அந்த தாசில்தாரிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார் .இதனால் அந்த இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது .மேலும் இந்த கள்ள உறவு பற்றி அந்த தாசில்தாரின் மனைவிக்கும் தெரிய வந்து ,அவர் குடும்பத்திலும் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது .இதனால் அந்த தாசில்தார், சிலர் மூலம் அந்த பெண் போலீஸ் ருச்சி சிங்கை கொலை செய்து வீசி விட்டார் .பின்னர் அந்த ருச்சி சிங்கின் உடல் அங்குள்ள சாக்கடையில் இருந்து போலீசார் மூலம் மீட்கப்பட்டது .இப்போது இந்த கொலை பற்றி போலீசார் வழக்கு பதிந்து, இந்த கொலை தொடர்பாக ராணிகஞ்ச் தாசில்தார் மற்றும் அவரது மனைவியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *